அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்க பிரதமர் திட்டம்!

<!–

அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்க பிரதமர் திட்டம்! – Athavan News

நீதி, நிர்வாகம், நிறைவேற்றுத்துறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் முன்வைக்க பிரதமர் தீர்மானித்துள்ளார்.

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது என்பது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என பிரதமர் நம்புகிறார் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply