மீண்டும் கட்சி தாவினார் சுரேன் ராகவன்… சுதந்திர கட்சிக்கு இரண்டாவது இழப்பு!

அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான சுரேன் ராகவனும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார்.

முன்னதாக சுதந்திர கட்சி குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார்.

இந்நிலையில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் இரண்டாவது உறுப்பினரும் தற்போது மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துள்ளார்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்றமையினால் சாந்த பண்டார, கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply