மங்களவின் எரிபொருள் விலை சூத்திரத்தை கையில் எடுக்கும் புதிய எரிசக்தி அமைச்சர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக இருந்த மறைந்த மங்கள சமரவீர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் அவை நடைமுறைப்படுத்தப்படுத்துவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் எரிசக்தி அமைச்சராக பதவியேற்ற காஞ்சனா விஜேசேகர எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்,

(1) இரண்டு கடினமான பொறுப்புகள். மேலும் முதல் கடமை என்பது கடினமான முடிவு. 1.6 பில்லியன் தினசரி இழப்பைக் குறைக்க எரிபொருள் விலையை மாற்றியமைத்தல். எரிசக்தியில் சரியான நேரத்தில் எரிபொருளை வாங்குதல், எரிபொருளை பரவலாக கிடைக்கச் செய்தல் மற்றும் எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply