பட்லர் சதம்- சஹால் ஹெட்ரிக்: ராஜஸ்தான் மகத்தான வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 30ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 103 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் சிவம் மாவி, பெட் கம்மின்ஸ் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 218 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால், 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 85 ஓட்டங்களையும் ஆரோன் பின்ஞ் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 5 விக்கெட்டுகளையும் ஒபேட் மெக்கொய் 2 விக்கெட்டுகளையும் பிரசீத் கிருஸ்ணா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஹெட்ரிக் அடங்களாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய யுஸ்வேந்திர சஹால் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply