
புதிய அமைச்சரவை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் நேற்றுக்காலை பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை.
ஆனாலும், அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களை அலரிமாளிகையில் நேற்று மதியம் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் கடந்த சனிக்கிழமை இரவு முன்னாள் அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் இடைநடுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





