நாம் மட்டுமே எரிபொருள் விலையை குறைத்தோம் – கனவு காணும் முன்னாள் அமைச்சர்

பாராளுமன்றம் இன்று காலை கூடிய நிலையில் சற்றுமுன் உரையாற்றிய முன்னாள் விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அழுத்கமகே கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் எரிபொருள் விலையேற்றம் வேண்டுமென்று மேற்கொள்ளப்படவில்லை.உலக சந்தையில் எவ்வாறு மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கிறதோ,அதற்கு ஏற்ற விலையிலேயே நாம் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும்.

இப்போதும் கூட நாம் மட்டுமே குறைந்த விலையில் எரிபொருளை வழங்கி வருகின்றோம்.எமது ஜனாதிபதி முதுகெலும்புள்ளவர்.

ஆகவே தான் அவர் தனது பிழையை ஒத்துக்கொண்டுள்ளார்.இதுவே நீங்கள் இன்றுவரை ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்னமும் பொறுப்பேற்கவில்லை.நாம் சோர்ந்துவிடவில்லை என்றார்.

Leave a Reply