தேசிய சுகாதார சேவையில் ஏறக்குறைய 200 வெளிநாட்டு செவிலியர்கள் சேர்ப்பு!

ஸ்கொட்லாந்தின் மருத்துவமனைகள் இந்தியா- பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 191 செவிலியர்களை தேசிய சுகாதார சேவைக்கு உதவ நியமித்துள்ளன.

மேலும், வெளிநாட்டில் இருந்து மேலும் 203 செவிலியர்களை பணியமர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் ஆட்சேர்ப்பு நிறுவனங்களுடன் உள்ளன என சுகாதார செயலாளர் ஹம்சா யூசப் கூறினார்.

மருத்துவமனைகள் மற்றும் சமூக சுகாதார குழுக்களில் பணியாற்ற 1,000 க்கும் மேற்பட்ட புதிய துணை ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நகர்வுகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 19.5 பவுண்டுகள் மில்லியன் நிதி தொகுப்புகளின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply