ரம்புக்கனை சம்பவம்; முழுமையான வெளிப்படையான விசாரணை அவசியம்-அமெரிக்க தூதர் வலியுறுத்து.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதர் ஜூலி சுங் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

ரம்புக்கனையில் இருந்து வெளியாகும் பயங்கரமான செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். எந்தவொரு வன்முறையையும் நான் கண்டிக்கிறேன் – எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவோ அல்லது காவல்துறையினருக்கு எதிராகவோ – மற்றும் அனைத்து தரப்பிலிருந்தும் கட்டுப்பாடு மற்றும் அமைதியைக் கோருகிறேன். முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம் & அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply