
ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
மக்கள் போராட்டங்கள் மீது கோட்டா மஹிந்த – பசில் பாசிச அரசு மேற்கொள்ளும் அடக்குமுறையை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். ரம்புக்கனையில் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சகோதரனுக்கு எமது புரட்சிகர அஞ்சலிகள். அரசின் பயங்கரவாதத்தை ஒழிக்க அணித்திரள்வோம் அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றியெறிவோம். மக்களின் அதிகாரத்தை கட்டியெழுப்ப உறுதியுடன் போராடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





