
கொழும்பு, ஏப் 19
ரம்புக்கனை சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாக இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கான கனெடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் பொறுப்பு கூறலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் விடயத்தில், அதிகப்பட்ச விதிகள் அமல்ப்படுத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கான கனெடிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.





