மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு இல்லை! – எதிர்க்கட்சி கண்டனம்

ரம்புக்கனையில் நிராயுதபாணியான மக்கள் மீது மிலேச்சதனமான முறையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படுவதற்கு நாட்டு மக்களுக்கு உரிமைக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வாழ்வதற்காக சூழ்நிலையை உருவாக்கி தருமாறு கோரியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரத்துபஸ்வெல சம்பவமும் இதேபோன்றதொரு அழிவாகவே காணப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply