ரம்புக்கனை சம்பவம் – சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனையிட்டு உண்மையைக் கண்டறியவும்: நாமல்

ரம்புக்கனை சம்பவம் குறித்து சி.சி.ரி.வி. பதிவுகளை சோதனை செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவம் குறித்த உண்கைளைக் கண்டறிய சாதாரண சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது, பொலிஸார் தீ வைத்ததைப்போன்று வீடியோ உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ வைத்ததைப்போன்று வீடியோ உள்ளது. இவ்வாறு பல காணொளிகள் உள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கட்டாயமாக சி.சி.ரி.வி. காணப்படும். எனவே அதனை பரிசோதிப்பதன் மூலம் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முடியும்”

இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். நாட்டில் பிரச்சினைகள் உள்ளன அவற்றை  அரசியலாக்கமால் தீர்வு காண வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply