
பாராளுமன்றத்தில் நாளை (21) கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு நாளை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை சபாநாயகர் கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, அவ்வாறான இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் நாளை இந்த அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி பதவி விலகக் கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





