ரம்புக்கன்ன சம்பவம்; வைத்தியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

ரம்புக்கன்ன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம்,

ரம்புக்கன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் 15 பொலிஸாரும் 20 பொதுமக்களும் அடங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சிகிச்சை பெற்றுவரும் 18 வயது இளைஞன் ஒருவரது கால் ஒன்று அகற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் நேற்றைய போராட்டத்தில் வன்முறை பிரயோகிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக மருத்துவர் வாசன் தெரிவித்தார்.

Leave a Reply