
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதுண்டு இராணுவச் சிப்பாய் பலி!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவர் சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





