ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவிப்பு!

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர்  துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறித்து கவலையடைவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், அதிகாரிகள் எப்போதும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தேவைக்கு அதிகமாக பலத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

நேற்றைய தினம் ரம்புக்கனையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழ்ந்ததுடன் 10 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply