கொட்டகலையில் வீதி மறியல் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும்  கொட்டகலை நகரில் இன்று மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் படுத்தும்,  ஒப்பாரி வைத்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.

கொட்டகலை பகுதிக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும்  ஏற்படாமல் சுதந்திரமாக செல்வதற்கு போராட்டக்காரர்கள் இடமளித்தமை விசேட அம்சமாகும்.

Leave a Reply