பேசாலை மீனவர்கள் இருவர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது!

இந்தியா செல்ல முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் மன்னார் பேசாலைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கச்சதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை கைதுசெய்யப்பட்ட அவர்கள் நெடுந்தீவு பொலிஸாரிடம் பிற்பகல் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் இருவரும் பேசாலையிலிருந்து மீன்பிடிக்காக சென்று கச்சதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் வலையினை கடலில் படரவிட்ட பின்னர் மன்னாருக்கு திரும்பவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே, படகின் உரிமையாளர் பேசாலையில் உள்ளதாகவும் தனது படகில் மீன்பிடி நடவடிக்கைக்காக இளைஞர்களை அனுப்பிவைத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

Leave a Reply