
3 தேவாலயங்கள் உட்பட கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதிகள் அடங்கலாக 07 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) மூன்று வருடங்கள் நிறைவுபெறுகின்றது.
2019 ஆம் ஆண்டு இதே நாளில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 269 பேர் உயிரிழந்ததுடன் பலர் அங்கவீனமடைந்துள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(21) நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை திட்டமிட்ட மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவது தொடர்பில் கத்தோலிக்க சபை கடும் அதிருப்தியிலுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட பங்கின் ஊடகப் பணிப்பாளர் அருட்தந்தை கிருஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.





