
இபாராளுமன்ற அமர்வு இன்று காலை மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்கு இன்று 3 ஆண்டுகள் கடந்தும் தீர்வு கிடைவில்லை.இதே போலத் தான் 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.இதே நாளில் வெடி கொளுத்தி ,பால் சோறு உண்டு அன்று சிங்கள மக்கள் மகிழ்ந்திருந்தனர்.இன்று அதே மக்கள் தான் கோட்டா அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.அவர்களின் போராட்டத்தை நாம் மதிக்கின்றோம்.ஆதரவு வழங்குகின்றோம்.
இதே சமயம் உங்கள் உறவுகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் எவ்வளவு அழகாக அமைதியாக வைத்திருக்கிறீர்கள்.ஆனால் வடக்கு கிழக்கில் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் ஏறி மிதிக்கின்றனர்.அவர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்.
அங்கே இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.அப்போது தான் இந்த நாட்டுக்கு அமைதி கிடைக்கும்.இப்போது செல்லும் போக்கு இரத்த ஆற்றை ஓட வைப்பதற்கான போக்காக காணப்படுகிறது என்றார்.





