தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பிற்கு பிரதமர் பாராட்டு

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கு வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கொண்ட தீர்மானங்களினாலே தற்போதைய நிலைமை உருவாகியுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். நெருக்கடி நிலைமையினை உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள், அப்பாவி போல் நடித்து தற்போதைய அரசாங்கத்தின் மீது பழிசுமத்துவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply