தமது உடமைகளுடன் பாதயாத்திரை செல்லும் சுற்றுலா பயணிகளின் அவலநிலை

இலங்கைக்கு வருகைதந்துள்ள சுற்றுலா பயணிகள், நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் காரணமாக பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லிந்துலையில் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமது உடமைகளுடன் நடந்து சென்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் காணப்படுகின்ற நெருக்கடி நிலைமைகள் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply