
நாட்டில் இன்று ஒரு குழுவினர் பெற்றோல் தரக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரங்குளிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்காக, புத்தளம் – கொழும்பு வீதியை மதுரங்குளிய நகரத்திலிருந்து மூடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், பெருமளவான மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்





