வரி வருமானத்தை அதிகரிக்க விரைவில் நடவடிக்கை! – நிதி அமைச்சர்

நாட்டின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய வரி வருமானம் போதுமானது அல்ல என்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நாட்டின் வரி வருமானம் 8 வீதம் அளவில் காணப்படுவதாகவும், அதனை 12 முதல் 14 வீதம் வரை அதிகரிக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டு மக்கள் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் குறித்த நடவடிக்கையினை மிகுந்த அவதானத்துடன் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply