
யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் உள்ள சடலங்களை அடையாளம் கண்டு பொறுப்பேற்குமாறு யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி கேட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் விடுதி இல. 08 இல் சிகிச்சை பெற்று வந்த தலைமன்னார் மார்ட்டின் கிராமத்தை சேர்ந்த வயது 64 பி. மணிவேல் என்பவரும், கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி பாஷையூர் சென் அன்ரனிஸ் தேவாலயத்துக்கு முன்னால் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வீதியில் விழுந்து இறந்துள்ளார்.
இவர்கள் இருவரது சடலங்களும் யாழ் .போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆகவே இவ் இரு சடலங்களையும் உரியவர்கள் அடையாளம் காட்டி பொறுப்பேற்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர் .





