காலி முகத்திடலில் உயிர் பிழைக்க போராடும் தேரர்!

காலி முகத்திடலில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட தெரிபொஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டா கோ கிராமப் போராட்டத்திற்கு ஆதரவாக வண.தெரிபொஹே சிறிதம்ம தேரர் கடந்த 20ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வண.மாத்தறை விமலதேவ தேரர் காலி முகத்திடலில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply