ஜனாதிபதி முறை ஒழிப்புக்கு மக்கள் கருத்துகணிப்பு நடாத்தவேண்டும்- தயாசிறி.

பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர் தலைமையில் கூடியது.

இந்நிலையில் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர,

தற்போதைய நிலையில் ஜனாதிபதி முறை ஒழிப்புக்கு மக்கள் கருத்துகணிப்பை ஜனாதிபதி மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225பேரும் வீட்டிற்கு அடித்து அனுப்பும் நிலையில் மக்கள் உள்ளதாகவும் உடனடியாகவே 19வது அரசியலமைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply