
பாராளுமன்றம் இன்று காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி தற்போதுவரை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சபையில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
தற்போதைய நிலையில் சிங்களவர்களின் குரல்கள் எமது விடுதலைப் போராட்டத்தை ஏற்கும் விதத்தில் எழுகின்றன என தெரிவித்தார்.
அத்துடன் அனைவரும் தற்போது ஒன்றுபட வேண்டும் எனவும் தெரிவித்ததுடன் சில தினங்களுக்கு முன் ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு வடக்கு கிழக்கில் அஞ்சலி செலுத்தப்பட்டுவருகவதாகவும் தெரிவித்தார்.





