வெட்கம் ,மானம் இருந்தால் பதவி விலகுங்கள் – உதயகுமார் எம்.பி காட்டம்!

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி விவாதங்கள் தற்போது வரை நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் சபை அமர்வில் உரையாற்றிய நாடளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவிக்கையில்,

மக்கள் தெளிவாகி விட்டனர்.உங்களை நம்பி வாக்கு செலுத்திய மக்களே இப்போது உங்களை வீட்டுக்கு போகுமாறு கூறுகிறார்கள்.ஆனால் வீட்டுக்கு போகக் கூடாது.சிறைக்கு செல்ல வேண்டும்.வெட்கம் மானம் இருந்தால் பதவி விலகுங்கள்.மக்களை ஏமாற்றியது போதும்.

இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.காலையில் எழும்பியதும் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களை நியமித்தால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றார்.

Leave a Reply