வாரத்தில் இரண்டு நாட்கள் என்றாலும் எரிபொருள் தாருங்கள் – யாழ் மீனவர்கள் கோரிக்கை!

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்க சம்மேளனத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ்மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் அன்னராசா,

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்களின் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக நாட்டினது பொருளாதார சூழ்நிலைக்கு எங்களுடைய பிரச்சனைககள் விடுபட்டு செல்லாது அதனை முன்கொண்டுசெல்ல வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாரம் முழுவதும் கடற்தொழிலில் ஈடுபட்ட நாங்கள் இப்பொழுது வாரத்தில் மூன்று நாட்கள்தான் கடற்தொழிலில் ஈடுபடமுடிகிறது . இதற்கு 3 லிட்டர் மண்ணெண்ணை ஆவது கிடைக்கவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் மீனவர்களுக்கென்று ஓர் எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கி வாரத்திற்கு 2 நாள் அல்லது 3 நாள் எரிபொருள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply