
முகக்கவசம் அணியும் விடயத்தில் அரசாங்கத்தின் திடீர் தீர்மானங்கள் போராட்டங்களை குறுக்கு வழியில் ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் முதிர்ச்சியற்ற செயல்பாடு என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டே உள்ளது. சீனா உட்பட பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் அரசாங்கம் முகக்கவசம் அணியும் விடயத்தில் வேடிக்கையான தீர்மானங்களை எடுத்துவருகிறது.
நேற்றுமுன்தினம் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லையென அறிவித்த அரசாங்கம் மீண்டும் நேற்றுமுதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டமென தெரிவித்துள்ளது.
இவ்வாறு அறிவிப்புகள் வெளியிட இரண்டு காரணங்கள் தான் உள்ளன. மீண்டும் நாட்டில் கொரோனா தொற்றை அதிகரித்து நாட்டை முடக்குவதற்கும் மற்றொன்று போராட்டக்காரர்களை அடையாளம்கண்டு ஒடுக்குவதற்காகும் என்றார்.





