ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை! – பொலிஸ்மா அதிபர்

பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் அறிவுறுத்தல் வழங்கவில்லையென பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள் இன்று முற்பகல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் முன்னிலையில் குறித்த அதிகாரிகள் இன்று காலை முன்னிலையாகினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Leave a Reply