பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (21) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், பாராளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி , இன்றும் நாளையும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அதனடிப்படையில், பல திருத்தச் சட்டங்கள் இன்று(21) பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.






