இலங்கையில் உயிரிழந்த அரியவகை மனித குரங்கு குட்டி

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மனித குரங்கு ஒன்று குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.

கூண்டுக்குள் இருந்த குளத்திலேயே இந்த குரங்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒராங்குட்டான் என்று அழைக்கப்படும் மனித குரங்கு ஒரு அழிந்து வரும் இனமாகும்.

தற்போது இது உலகின் அரிதான விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஏற்கனவே வயதான பெண் மனித குரங்கும் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டது.

அதன்படி, கடந்த 5 மாதங்களில் இதுபோன்ற இரண்டு அரிதான மனித குரங்குகளின் இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

Leave a Reply