சீமெந்தின் விலையை அதிகரிக்க முடிவு?

கொழும்பு, ஏப் 23

சீமெந்து பொதியின் விலையை அடுத்த வாரம், மீண்டும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி உயர்வு என்பன காரணமாக, சீமெந்து பொதியின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பொதி ஒன்று தற்போது 2,350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply