யாழ் பல்கலைகழக மாணவி சடலமாக மீட்பு

யாழ் பல்கலைகழகத்தில் மாணவியொருவர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடம் இரண்டாம் வருட ஆண்டில் கல்வி கற்றுவந்த, 22 வயதுடைய சிந்துஜா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பளையை சேர்ந்த குறித்த மாணவி, விடுதி ஒன்றிலிருந்து தங்கி இருந்தே யாழ். பல்கலையில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் அவர் தங்கியிருந்த விடுதியிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply