யாழ்.பல்கலைக்கழக மாணவி உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி தனுஜா என்பவர் சற்றுமுன்னர் யாழ்.பல்கலைக்கழக்கத்துக்கு அருகிலுள்ள விடுதியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.

வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் செல்வதாகக் கூறி யாழ்ப்பாணம் வந்த மாணவி தனது அறையை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு காற்றாடியில் துணியைக் கட்டித் தற்கொலை செய்துள்ளார்.

மாணவியைக் காணவில்லை என்று விடுதியில் மாணவர்கள் தேடிச் சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. அதனை உடைத்து உள்ளே சென்ற
மாணவர்கள் குறித்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அவதானித்தனர்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply