
கொழும்பு, ஏப் 23
கொரோனா தொற்று உறுதியான மேலும் 40 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் 2 பேர் கொவிட் மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,131ஆக அதிகரித்துள்ளது, இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,502 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 4,060 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





