செர்பிய பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச் மற்றும் ரூப்லெவ் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி!

செர்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் ரஷ்ய வீரர் அண்ட்ரே ரூப்லெவ் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் இத்தாலியின் பெபியோ போக்னிநியும் ரஷ்ய வீரர் அண்ட்ரே ரூப்லெவ்வும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் இலகுவாக வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு அண்ட்ரே ரூப்லெவ் தகுதி பெற்றார்.

இதேவேளை மற்றுமொரு போட்டியில் கரேன் கச்சனோவ் மற்றும் உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் 4-6 என முதல் செட்டை இழந்த நோவக் ஜோகோவிச், அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-2 என கைப்பற்றி இறுதி போட்டிக்கு நுழைந்தார்.

இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள செர்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் அண்ட்ரே ரூப்லெவ்லும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

Leave a Reply