பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோருக்கு முன்னர் இருந்த இராஜாங்க அமைச்சு பதவி

நாடாளுமன்ற உறுப்பினர்களான பியல் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் முன்னர் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என ஜனாதிபதி ஊடக பிறவு தெரிவித்துள்ளது.

லொஹான் ரத்வத்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவார்.

இதேவேளை, பியல் நிஷாந்த, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பதவியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply