இரும்பு வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள கொழும்பு வாழ் மக்கள்!

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. “இளைஞர்களின் கனவுகளுக்கு இறுதி ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கொழும்பின் பிரதான இடங்களுக்குச் செல்லும் வீதிகளில் நிலையான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அவ்வழியாக பயணிக்க வேண்டிய பஸ்கள், வேறு வழிகளுக்கு திரும்பிவிடப்படுகின்றததோடு நடந்துச் செல்வோர் கூட இரும்பு வேலிக்குள் நுழைய முடியாத அளவில், மிக நெருக்கமாக இரும்புகள் கட்டப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை, யோர்க் வீதி, வங்கி வீதி உள்ளிட்ட இடங்களிலேயே வீதிகளை முழுமையாக மறைத்து இவ்வாறு கம்பி வே​லிகள் அமைக்கப்பட்டு பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Leave a Reply