ஆர்ப்பாட்டப் பேரணியை தடுக்க வீதிகளில் கூர்முனை வீதித் தடைகளும் தயார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தற்போது நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியை தடுக்கும் விதத்தில் வீதிகள் எங்கும் கடும் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகள் கூர்முனைகளை கொண்டதாக காணப்படுகின்றது.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக மருதானை தொழில்நுட்பக் கல்லூரி சந்தி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply