மின்சார தீ விபத்து: 1,400 ஸ்கூட்டர்களை திரும்ப பெற ஓலா நிறுவனம் முடிவு

புதுடெல்லி,ஏப் 24

மின்சார வாகனங்களில் தீ விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், 1,400க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெற ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமீப காலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

ஓலா பேட்டரி அமைப்புகள், ஏற்கனவே இந்தியாவில் சமீபத்தில் முன்மொழியப்பட்ட தரத்துடன் இணங்குகின்றன, மேலும், ஐரோப்பிய தரநிலை இசிஇ 136 உடன் இணங்குகின்றன.

இருப்பினும், எங்கள் சேவை பொறியியலாளர்கள், அனைத்து வெப்ப அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், பேட்டரி அமைப்புகளிலும் முழுமையான சோதனையை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா மட்டுமல்லாமல் பிற நிறுவனங்களான, ஒகினாவா ஆட்டோடெக் 3,000 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளது. அதே போல, பியூர் இவி நிறுவனம் 2,000 வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply