இலங்கை மக்களின் அமைதிப் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டேன்! ஜேர்மன் தூதுவர்

இலங்கை மக்கள் தங்களது கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையினை அமைதியாகப் பயன்படுத்தி வருவதாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Holger Seubert தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஜேர்மன் தூதுவர் Holger Seubert தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மக்களின் அமைதிப் போராட்டத்தினால் தாம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போராட்டம் 1989 ஆம் ஆண்டு ஜேர்மனியில் முன்னெடுக்கப்பட்ட சக்திமிக்க அமைதிப் போராட்டத்தினை மீண்டும் நினைவு படுத்துவதாகவும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஜேர்மன் தூதுவர் Holger Seubert மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply