மனைவி உட்பட 3 பெண்களை தாக்கி தானும் தற்கொலை முயற்சி

கம்பஹா, ஏப் 25

வெலிவேரிய பகுதியிலுள்ள வீடொன்றில் தனது மனைவி உட்பட மூன்று பெண்களை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர், தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் சந்தேக நபரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவரின் சகோதரி, அவருடைய நண்பி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply