அமெரிக்க தூதர் யாழில் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடல்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்றையதினம் மாலை யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

இந்நிலையில் நேற்றையதினம் மாலை யாழ்மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மற்றும் யாழ் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

Leave a Reply