அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர் பதவிகளுக்கு புதிய நபர்கள் நியமனம்

புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர் பதவிகளுக்கு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அமைச்சரவைப் பேச்சாளராக வெகுசன ஊடக அமைச்சர் நாலக கொடஹேவா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ரமேஷ் பத்திரண மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதிய அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply