அலரிமாளிகைக்கு முன்னால் குவிக்கப்பட்ட பொலிஸ் வாகனங்கள்! இன்று அதிகாலை பதற்றம்

கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னால் ‘ மஹிந்த கோ கம ‘ எனும் பெயரில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்களை நடைபாதையில் தரிந்து ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.

இதனால் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Leave a Reply