அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிய கப்பல் நாளை நாட்டிற்கு வருகை!

நாட்டில் கடந்த சில வாரங்களாக வைத்தியசாலைகளில் பல்வேறு வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் நாட்டுக்கு அவசியமான அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடனுதவியின் கீழ் 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள இருப்பதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்திருந்தார்.

கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

குறித்த சந்திப்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அவற்றை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 100 நாட்கள் வரை செல்லும். அதுவரை இந்திய கடன் வசதியின் கீழ் மருந்து விநியோகம் தொடரும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply