திருகோணமலையில் தொடரும் கிரவல் அகழ்வு பணியால் பதற்ற நிலை

திருகோணமலை – கன்னியா பீலியடி பகுதியில் கிரவல் அகழ்வுப் பணியை நிறுத்துமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அங்கு தொடர்ச்சியான கிரவல் அகழ்வு பணியை மேற்கொண்டதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (25) இடம் பெற்றது.

குறித்த ராமணண் வீதி, கிரவல் அகழ்வால் மிக மோசமாக சேதமாக்கப்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்துவது தொடர்பில் முரண்பாடுகளும் ஏற்பட்டன.

உப்புவெளி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Leave a Reply